Mc dass Service Nagamuthu Mohanadas Mo

Mc dass Service            Nagamuthu   Mohanadas   Mo zur Zeit keine

10/05/2023
22/08/2021
13/08/2021
https://www.youtube.com/channel/UCi81nbehE7E2Lruu4OVvdLAஇது எனது  Youtube  Mr Mo swiss லைக் பண்ணவும். பெல் பட்டனை கிளிக்...
08/08/2021

https://www.youtube.com/channel/UCi81nbehE7E2Lruu4OVvdLA
இது எனது Youtube Mr Mo swiss
லைக் பண்ணவும். பெல் பட்டனை கிளிக் பண்ணவும்.
சப்ஸ்கிரைப் பட்டனை அமத்தி ஆதரவுதரவும்.
Thanks.
Mohanadas (Gnanam)

ROC    Team.2020 Tokyo    இல் /// தேசம் அற்ற விளையாட்டு வீரர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அணி இன்று சாதனை புரிந்து கொண்...
27/07/2021

ROC Team.

2020 Tokyo இல் /// தேசம் அற்ற விளையாட்டு வீரர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அணி இன்று சாதனை புரிந்து கொண்டு உள்ளது.

மொத்தமாக 332 விளையாட்டு வீரர்களையும் கொண்டது.
இதில் 186 பெண் விளையாட்டு வீராங்கனைகள்,146 ஆண் வீரர்களை கொண்ட மிகப்பெரிய அணியாக இன்று களத்தில் உள்ளது.

ஒலிம்பிக் கொடியின் சின்னத்தை, தங்களுடைய தேசிய கொடியாக பயன்படுத்தி இந்த அணி களத்தில் உள்ளது.

இவர்களைப் பற்றிய எந்த தகவல்களும் இணையத்தளங்களிலும் இதுவரை காணப்படவில்லை.

தெரிந்தவர்கள் சரியான தகவலை பதிவு செய்யுங்கள்.

இன்று நாம் , 8 லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை தமிழ் மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக வாழ்கின்றோம்.

சில நாடுகளில் நமக்கு நிரந்தர வதிவிடம் தரப்பட்டிருந்தாலும் நமக்கென்று ஒரு நாடு இல்லை.

இதை முன்மாதிரியாக வைத்துக்கூட நாம் பல நல்ல முன்னெடுப்புக்களை செய்ய முடியும்.

இன்னொரு சிறு குறிப்பு! இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில், (குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம், தீவகப் பகுதிகளில்) விவசாய நிலங...
14/05/2021

இன்னொரு சிறு குறிப்பு!

இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில், (குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம், தீவகப் பகுதிகளில்) விவசாய நிலங்களை விடவும் அதிகமாக மன்னாரில் இருந்து தீவகம் வரையும் உள்ள கரையோரப் பகுதிகள் பூராவும் இந்தியன் முள்ச் செடிகள் அடர்ந்து சிறைப்பிடித்து வைத்திருக்கின்றன. 2009 யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு மீள்குடியேறிய மக்கள் தத்தமது காணிகளுக்குள் வளர்ந்திருந்த இந்த விஷச் செடிகளை அகற்றினார்களே தவிர கடற்கரையோரங்களில், அரச நிலங்களில் அடைத்து நின்ற மரங்களை அதிகம் அகற்றவில்லை. அவற்றை வெட்டி அகற்றுவதற்கான வெட்டுத் தளபாடங்கள் மக்களிடம் இல்லை.

தத்தமது காணிகளுக்குள் நிற்கும் இந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும், அல்லது தண்டனைக்குரிய குற்றம் என்று அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறது. சரி, நல்ல சட்டம்தான். ஆனால் அரசுக்குச் சொந்தமான நிலங்களில் அடைத்து நிற்கும் இந்த விஷ மரங்களை வெட்டி அகற்றாமல் இருப்பதற்க்கு யாருக்குத் தண்டனை கொடுப்பதாம்.

ச்சுனாமியின் பெயரைச் சொல்லி மீனவர்களை கடற்கரைகளை விட்டு அப்புறப் படுத்தினார்கள்.
மீனவர்களுக்குச் சொந்தமான கடற்கரைகளைச் சட்டம் போட்டு அவர்களை அந்நியப் படுத்தி, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கடற்கரைகளைப் பட்டா போட்டு வைத்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் கடற்கரைகள் மிகவும் பாதுகாப்பானதாகவும், தூய்மையாகவும் இருந்தது. மீனவர்கள் கரைகளை மிகப் பக்குவமாகப் பாது காத்தனர்.

பருவகாலத் தொழில்களைச் செய்வதற்காக தீவகத்திலிருந்து புத்தளம் வரையிலும் தாம் விரும்பிய கரைகளில் தற்காலிக வாடிகளை அமைத்துத் தொழில் செய்து வந்தனர். எந்தக் கேடும் கரைகளுக்கு அவர்களால் நேர்ந்ததில்லை. மாறாக கடற்கரைச் சூழல்களைப் பாதுகாத்து வந்தனர். சட்டவிரோதத் தொழில்களை யாரும் செய்யாதபடிக்கு தமக்குள் தாமே கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வந்தனர்.

சர்வதேசக் கடற் கொள்ளை முதலாளிகளுக்கு தமிழக கடற்கரைகளைத் தாரைவார்க்க இந்தியா பல பன்நாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, தமிழக மீனவரகளைக் கூண்டோடு அழிக்கச் செயற்பட்டு வருவதுபோல் இலங்கையும் செயற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான் ஆனாலும் எல்லாத் தரப்புமே ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்பதுதான் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும் சுமார்

அதேவேளை கடந்த ஒருவருட காலமாக மன்னா சிலாவத்துறையிலிருந்து அரிப்புத்துறை, வங்காலை, தலைமன்னார், பேசாலை, நாச்சிக்குடா, பள்ளிக்குடா, வலைப்பாடு, கவுதாரிமுனை, வேலியடி, மண்ணித்தரை, கல்முனை, தீவகம் என கரைநீளம் பயணப்பட்டபோது நான் அவதானித்தவை மனதுக்குப் பெரும் அதிர்ச்சியையும், அயர்ச்சியையும் தந்தன.

இந்தக் கரைகள்தான் அதிகமான பெருமண்ற் பரப்புக்களையும், கனிம வளங்களையும் கொண்ட கரைகளாகும். இந்தக் கடற் பரப்புக்கள்தான் இலங்கைத் தீவின் அதிகமான கண்டமேடைகளையும், பெருவாரியான கடல்வாழ் உயிரிகளின் வாழ்விடங்களாகவும் அமைந்தவைகளாகும்.

இந்தக் கரைகளில்தான் இப்போ அதிகமான இந்தியன் முட்செடிகள் அடர்த்தியாகப் பரந்து காணப் படுகிறது.
மேற்சொன்ன கரையோரப் பிரதேசங்களில் பெரும்பான்மையாகக் கத்தோலிக்க மீனவர்களே செறிந்து வாழ்கிறார்கள். ஆக, இந்தப் பிரதேசங்களில்தான் தமிழ்ப்பகுதிகளுக்கான கத்தோலிக்க திருச்சபை அதிகமான கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டிருக்கிறது. கோயில்களைக் கட்ட ஊக்கப் படுத்தும் இந்தக் கத்தோலிக்கம் இதே இளம் சமூகத்தினரைக் கொண்டு அந்தந்தக் கிராமத்துக் கரையோரங்களிலுள்ள இந்த முட் புதர்களை ஒருசில தினங்களுக்குள்ளேயே சிரமதானப் பணிகள் மூலம் இல்லாமல் ஒழிக்க முடியாதா? நிச்சயம் முடியும். அல்லது அந்தந்தப் பிரதேச சபைகளின் உதவிகள், அனுசரணைகளுடன் இந்தப் பணிகளை நிச்சயம் செய்ய முடியும். ஆனால் அப்படிச் செயற்பட்டதாக இதுவரை நானறியேன்.

கடந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல்ப் பிரச்சாரங்களில் தமிழ்க் கட்சிகள் தாம் செயற்படுத்துவதாகச் சத்தியம் செய்து வெளியிட்ட அறிக்கைகளை இவ்விடத்தில் மக்கள் ஒருதடவை ஞாபகப் படுத்திப் பார்ப்பது நல்லது.

நன்றி:

கட்டுரையாக்கம், புகைப்படம்
(Thamayanthi Simon 2018)

இந்த காலகட்டம்😢😢😢 என்பது மனித இனத்திற்கு (குறிப்பாக நல்ல மனிதர்கள்) 🐣🐣🐣மிகவும் இக்கட்டான சூழ்நிலை.அந்த வகையில், நாம் வாழ...
18/04/2021

இந்த காலகட்டம்😢😢😢 என்பது மனித இனத்திற்கு (குறிப்பாக நல்ல மனிதர்கள்) 🐣🐣🐣மிகவும் இக்கட்டான சூழ்நிலை.

அந்த வகையில், நாம் வாழும் பல பொக்கிஷங்களை இழந்துள்ளோம்.👨‍🎨👨‍🎨👨‍🎨

இவை எமக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.🥵🥵🥵

இவர்கள் விதைத்து விட்டு சென்றதில் இருந்து,🎊💐 நாம் ஒரு துளி விதையை யாவது மீண்டும் விதைப்போம்.🍎🌠🙏🏻

28/01/2021
28/01/2021

வேற வழி இல்லை.
ஆண் பாவம் பொல்லாதது.

Adresse

Schlieren
8952

Öffnungszeiten

Samstag 09:00 - 17:00
Sonntag 09:00 - 17:00

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Mc dass Service Nagamuthu Mohanadas Mo erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie